நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை !

Wednesday, February 21st, 2018

எதிர்வரும் 27ஆம் திகதி நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை வெளியிடப்படவுள்ளது. இதில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த கொள்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் தேசிய நல்லிணக்கத்திற்கான பணியகம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வுக்கான பணியகம் தயாரித்த மூன்று திரைப்படங்களும் றீகல் திரையரங்கில் திரையிடப்படவுள்ளன.

Related posts: