நலன்புரி முகாமில் வசிக்கும் மக்களை வெளியேற்றவில்லை யாழ்.மாவட்டச் செயலர் தெரிவிப்பு!

Sunday, January 8th, 2017

நல்புரி முகாம்களில் உள்ள மக்களை வெளியேற வேண்டுமென எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்தரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நலன்புரி முகாம்களில் வசித்த வரும் மக்களை எழும்புமாறு எந்த ஒரு அதிகாரிகளும் அறிவுறுத்தவில்லை எனவே இந்தத் தகவல் பெய்யானது. நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் அவர்களின் பிரதேசங்களில் மீளகுடியேற்றப்பட்ட பின்னர் நிரந்தரமான காணிகள் இல்லாத மக்களுக்கு அரச செலவில் காணி கொள்வனவு செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை இடம்பெறுகின்றத. அதன் ஒரு பகுதியாகவே கீரிமலை பகுதியில் நிரந்தரக் காணிகள் இல்லாதவர்களுக்குச் சீமெந்து தொழிற்சாலையின் காணியில் வீடுகள் கட்ட வழங்கப்பட்டன. அதனைப் போன்றே தற்போதும் நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களில் நிரந்தரக் காணிகள் இல்லாதவர்களுக்குத் தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிரந்தர காணிகள் இல்லாதவர்கள் காணிகளைக் கொள்வனவு செய்யும்போது 4லட்சம் ரூபாவரை வழங்கப்படும். எனினும் குறித்த பணத்தொகை பொதுமக்களிடம் நேரடியாக வழங்கப்படாது. காணிகளை கொள்வனவு செய்தல் தொடர்பான விடயங்களை எங்களிடம் தெரிவிக்கும்போது நாங்களே நேரடியாகக் கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு வழங்குவோம் என்றார்.

vethanayakan_0

Related posts: