மானிப்பாய் வைத்தியசாலை விஸ்தரிப்பு: காணி கொள்வனவிற்கு மக்கள் உதவி தேவை – நோயாளர் நலன்புரி செயலாளர்!

Monday, October 31st, 2016

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் வைத்தியசாலையின் எதிர்கால விஸ்தரிப்புக்காக கொள்வனவு செய்யப்படவுள்ள காணிக்கு வலி.தென்மேற்கு மக்களின் நிதியுதவியை எதிர்பார்த்துள்ளதாக நோயாளர் நலன்புரி சங்க செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் எதிர்கால விஸ்தரிப்புக்காக மூன்று பரப்பு காணி 18இலட்சம் ரூபா மக்கள் வழங்கும் நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்காக இதுவரை வலி.தென்மேற்கு ஆனைக்கோட்டை உப அலுவலக பிரிவிற்குட்பட்ட மக்கள் 10 இலட்சம் ரூபாவை வழங்கி இத்திட்டத்திற்கு வலுசேர்த்துள்ளனர்.

ஆனைக்கோட்டையில் அமைந்துள்ள மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திக்கான காணி கொள்வனவு தொடர்பாக சங்கத்தின் செயலாளர் இ.மனோகரன் மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியசாலையில் அபிவிருத்திக்காகவும் நோயாளர் நலனுக்காகவும் டாக்டர் ஏ.காந்தநேசன் தலைமையில் முழுசேவை இடம்பெறுகின்றது. இச்சேவை வலி.தென்மேற்கில் மேலும் மெருகூட்ட வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது. கடந்த காலங்களில் 100 இற்கும் உட்பட்ட மக்களே மருத்துவசேவையை பெற்றனர். தற்போது 450 முதல் 550 இற்கும் மேற்பட்ட மக்கள் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்து சேவைப் பெறுகின்றனர். இவ்வாறு அதிகரித்த தேவைக்கு ஏற்ப மக்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான கட்டட வசதிகள், மருத்துவர் தங்குமிட கட்டடங்கள், வெளிநோயாளர் பிரிவுக்கான தேவைகள் என விஸ்தரிப்பு முக்கியமானதாக உள்ளது. எனவே இத்தேவைப்பாட்டை அடைய அருகில் உள்ள மூன்று பரப்பு காணி கொள்வனவு செய்யப்பட வேண்டிய அவசிய தேவைக்காக எமது நோயாளர் நலன்புரிச் சங்க பணியாளர்கள் 20 பேர் வீதிகளில் இறங்கி மக்களிடம் நிதிகோரி வருகின்றனர். வலி.தென்மேற்கு மக்கள் மிகுதி 8 இலட்சம் ரூபாவை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

9290Has

Related posts: