நத்தார் தினத்தன்று விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் மரணம்!

Wednesday, December 28th, 2016

நத்தார் தினத்தன்று யாழ். காக்கைதீவுப் பகுதியில் மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நாயுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகிக் காயமடைந்த 54 வயதான குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நத்தார் தினமான கடந்த-25 ஆம் திகதி பிற்பகல் குறித்த குடும்பஸ்தர் காக்கைதீவு கல்லுண்டாய் வெளிப் பகுதியில் மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நாயொன்று குறுக்கே பாய்ந்ததால் தடுமாற்றத்திற்குள்ளாகி   விபத்துக்குள்ளாகியிருந்தார். பின்னர் அவர் அந்த வீதியால் சென்றவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

நாவலடி வீதி. மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த செ .அரியநேசன்  என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

death165fvr23

Related posts: