தேர்தலுக்கு முன் மலையத்திலுள்ள பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட வேண்டும்- அமைச்சர்  மனோ!

Monday, July 17th, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச சபைகளின் எண்ணிக்கையை பத்தாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

“நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச சபைகளின் எண்ணிக்கையை பத்தாக உயர்த்துவது தொடர்பான எமது உறுதியான நிலைப்பாட்டினை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளோம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றும்” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: