அளவெட்டியில் மீன் வியாபாரிகள் போராட்டம்!
Thursday, March 21st, 2019
யாழ்ப்பாணம் அளவெட்டி கும்பலை மீன் சந்தையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் அறவிடப்படும் வரி கட்டணம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து மீன் வியாபரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய வரி அறவீடுகள் தொடர்பாக சந்தை வளாகத்தில் பிரதேச சபையால் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைப் பார்வயிட்டதன் பின்னர், சந்தைக்கு வெளியே இந்த போராட்டத்தை வியாபாரிகள் முன்னெடுத்திருந்தனர்.
“வலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே”,ஊழல் அரசியல் பெருச்சாளிகளே வரிச் சுமையை மக்கள் மீது திணிக்காதே” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related posts:
இலங்கையில மின்வெட்டைத் தவிர்க்க செயற்கை மழை!
முன்னாள் பிரதமர் மஹிந்த மற்றும் பசில் நாட்டைவிட்டு வெளியேற மாட்டார்கள் - சட்டத்தரணிகள் உயர் நீதிமன்...
எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூ...
|
|
|


