தேசிய மறுசீரமைப்பு பொறிமுறை அறிக்கை இம்மாதம் சமர்ப்பிப்பு!

தேசிய மறுசீரமைப்பு பொறிமுறைகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழு, இந்த மாத இறுதியில் தமது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்த குழு செயற்பட்டு வருகிறது.தேசிய மறுசீரமைப்புக்காக, உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்கல், நட்ட ஈடு வழங்கல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய பொறிமுறைக் குழுக்களை உருவாக்கும் நோக்கில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் இந்த வருட இறுதிக்குள் நான்கு பொறிமுறைக் குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அக்கராயனில் குடிநீர் விநியோகம் தடை - பொதுமக்கள் குற்றம் சாட்டு!
உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வழங்கிய புதிய நியமனம்!
யாழ்ப்பாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது செலுத்துகை நாளைமுதல் ஆரம்பம் - வடமாகாண பி...
|
|