தென்மேற்கு பருவப் பெயர்ச்சி : கடும் காற்றுடன் கடல் கொந்தளிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, June 6th, 2019

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருவதால் நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

அதில் மேலும், மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக பி.ப. 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டின் தென்மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.


இந்தியத் தரப்பு முன்வைத்துள்ள கோரிக்கை வடபகுதி வாழ்கின்ற மீனவர்களை அதிகம் பாதிக்கும்!
இராஜதந்திர பொறிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இலங்கை!
படுக்கைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு : யாழ் நகரில் சம்பவம்!
கணவரால் வன்புணரப்பட்ட மகளைப் புதைத்தோம் - தாய் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்!
தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை!