தென்மாராட்சியில் சிறுவர்களுக்கு திடீரென ஏற்படும் வயிற்றுவலி வைத்தியசாலை நிபுணர்கள் தெரிவிப்பு!

Thursday, January 12th, 2017

தென்மாராட்சியில் அண்மைக்காலமாக இரவில் 4 வயதுக்கும் 7வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் வயிற்றுக்குத்து மற்றும் வயிற்றெரிச்சல் நோய்களால் பாதிக்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர் என்று வைத்தியசாலை  தரப்புகள் தெரிவித்துள்ளன.

சிலரின் நோய் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு உணவு அருந்திய பின்னர் திடீரென வயிற்றுக்குத்து மற்றும் வயிற்றெரிச்சலினால் இவ்வாறு அவதிப்படுகின்றனர். சிகிச்சை வழங்கும்போது குணமடைகின்றனர். நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை.

அதிகளவு மிளகாய்ப் பொடி, மிளகுப் பொடி, கறுவாப் பொடி, பச்சை மிளகாய் போன்றவற்றைக் கொண்டு தயாரித்து விற்பனை செய்யப்படும் உணவுகளால் சிறுவர்களின் குடல் நேரடியாகப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனாலும் சிறுவர்களுக்கு இந்த அவதிநிலை வரலாம். வெறுவயிற்றில் அதிக காரத்தன்மை கொண்ட உணவுகளை உண்ணக்கொடுக்கும் போதும் அவதி நிலை வர வாய்ப்புள்ளது. வீடுகளில் எண்ணெயில் உணவுப் பதார்த்தங்கள் சமைக்கும் போது அளவான எண்ணெய் விட்டு சமைப்பது வழமை, எண்ணெய் நன்றாக காய்ந்தால் அதனை பாவிக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலாபம் கருதி பலரும் பாவித்த எண்ணெயை மீளவும் பாவித்து வருகின்றனர். அதனால் சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

chavakachcheri-hospital