தகவல் தரும் அலுவலர் இன்மையால் தகவலை அறிவதற்கு பொதுமக்கள் அலைச்சல்!

Thursday, March 2nd, 2017

தகவல் தரும் அலுவலர் இல்லை என்று தெரிவித்து தகவல் அறியும் விண்ணப்பத்தை ஏற்க மறுக்கும் சம்பவங்கள் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. தகவல் அறியும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடக்கவுள்ள நிலையில் தகவல் தரும் அலுவலர்களுக்கு இன்னமும் பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது

தகவல் அறியும் உரிமைச்சட்டம் கடந்த மாதம் 3ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவல் அலுவலர் நியமிக்கப்பட்டார். வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களில் தகவல் தரும் அலுவலர்களுக்கு கடந்த 21ஆம் திகதி பயிற்சிகள் வழங்கப்பட்டன. எனினும் கொழும்பு அரசின் கீழான திணைக்களங்களில் நியமிக்கப்பட்ட தகவல் தரும் அலுவலர்களுக்கு இன்னமும் பயிற்சிகள் வழங்கப்படவில்லை.

தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு செல்லும் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. தகவல் தரும் அலுவலர் வெளியே சென்றுள்ளார். அவர் அலுவலகத்தில் இல்லை என்று காரணங்களைக் கூறி தகவல் அறியும் விண்ணப்பத்தை ஏற்க மறுக்கின்றனர் என்று பொது மக்கள் கூறுகின்றனர். அலைக்கழிவதால் பணம் செலவாகின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சில அலுவலகங்களில் தகவல் தரும் அலுவலர் வெளியே சென்று விட்டார் என்று தெரிவித்து பதில் அலுவலர் ஒருவர் விண்ணப்பத்தைப் பொறுப்பேற்கின்றார் ஆனால் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட கடமைக்கான உறுதிப்படுத்தல் படிவத்தை வழங்க மறுக்கின்றனர் என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

21-rti

Related posts: