செயலமர்வு!

Saturday, April 2nd, 2016

க.பொ.த (உ.த) தொழில்நுட்பவியல் பாடத்துறையில் தமிழ்மொழி மூலம் பொறியியல் தொழில்நுட்பவியல் பாடம் கற்பிக்கும் நாட்டிலுள்ள சகல ஆசிரியர்களுக்குமான பயிற்சி செயலமர்வு, யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை முதல் 06ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக விரிவுரையாளர் கலாநிதி என்.முகுந்தன் தெரிவித்தார்.

பயிற்சி ஆரம்பிக்கும் இன்றையதினம் காலை 8.30 மணிக்கு முன்னர் ஆசிரியர்கள் யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வருகைதர வேண்டும். முதல் நாள் இரவு விடுதி வசதி தேவைப்படும் ஆசிரிய, ஆசிரியைகள் கலட்டி மிலேனியம் ரெஸ்டூரன்ட்டுக்கு வருகைதந்து விடுதி வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்தினம் உணவு வசதியை தாமே செய்துகொள்ள வேண்டும். இப்பயிற்சி அமர்வில் முழுநேரமும் கலந்துகொள்ளும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு விடுதி வசதி, உணவு, பங்குபற்றுகைக்குரிய அங்கிகரிக்கப்பட்ட கொடுப்பனவு ஆகியன வழங்கப்படும்.

வளி சீராக்கித் தொழில்நுட்பம், மோட்டார் தொழில்நுட்பம், குளிர்சாதனப்பெட்டி தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி வழங்கப்படும். தமிழ்மொழி மூலம் சகல செயற்பாடுகளும் நடைபெறும். கட்டாயம் இப்பாடத்துறை ஆசிரியர்கள் கலந்துகொள்வவது அவசியமாகும்.

Related posts: