கொரியாவிற்கு வேலைக்கு செல்வதற்கான அரிய வாய்ப்பு.!

Monday, March 6th, 2017

கொரிய மொழிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயங்கள் ஊடாக விநியோகிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரிய மொழி விருத்தி பரீட்சைக்கான விண்ணப்ப விநியோகம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. குறிப்பிட்ட தினங்களில் நாடுபூராகவும் அமைந்துள்ள பணியகத்தின் மாகாண காரியாலயங்கள், மாவட்ட பயிற்சி நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் கொரிய நாட்டில் உற்பத்தி மற்றும் கடற்றொழிலுக்காக மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றன.

மேலும் விண்ணப்பங்கள் அனுராதபுரம்,பதுளை, குருணாகலை,கண்டி, இரத்தினபுரி மற்றும் வவுனியாவில் அமைந்துள்ள பணியகத்தின் மாகாண காரியாலயங்களிலும் காலி,திருகோணமலை, மதுகமை, அம்பாறை,மட்டக்களப்பு, சிலாபம்,தபுள்ன,யாழ்ப்பாணம், பொலன்னறுவை மற்றும் தங்கல்லயில் அமைந்துள்ள பணியகத்தின் பயிற்சி நிலையங்கள் மற்றும் கட்டு நாயக்கவில் அமைந்துள்ள சகனபியச நிலையத்திலும் விநியோகிக்கப்படுகின்றன.

அத்துடன் இந்த பரீட்சைக்கு தோற்றக்கூடியவர்கள் 18 க்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருக்கவேண்டும். அத்துடன் சிறைத்தண்டனை அனுபவிக்காதவராக இருத்தல், கொரிய அரசாங்கத்தால் திருப்பி அனுப்பப்படாதவராக இருத்தல், பார்வைக்கோளாறு மற்றும் அங்க குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த பரீட்சைக்கு தோற்றமுடியாது. பரீட்சை எதிர்வரும் ஏப்பரல் மாதம் இடம்பெறவுள்ளது. இதுதொடர்பாக மேலதிக விடயங்களை பணியகத்தின் இணையத்தலமான  www.slbf.lk என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

Related posts: