சுத்தமான குடிநீர் வேண்டி ரொசல்ல கிராம பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்
Sunday, March 27th, 2016சுத்தமான குடிநீர் வேண்டும் என கோரி ரொசல்ல கிராம பகுதி மக்கள் நேற்று (27) வட்டவளை ரொசல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பல வருட காலமாக குடிநீர் சுத்தமாக கிடைப்பதில்லை எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் பிரச்சினை தீராத பட்சத்தில் இம்மக்கள் இப் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு பெற்று தர வேண்டும் என ஆர்ப்பாட்டகார்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
Related posts:
போலி மருந்து விற்றவருக்கு நீதிமன்றின் தீர்ப்பு
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுத்தப்படாடமாட்டாது - எ...
மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தம் இரத்து - 3 வருடத்திற்கு ஒருமுறை 25% ...
|
|