மெல்லக்கற்கும் மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றம் வேள்ட்விசன் அதிகாரி தெரிவிப்பு!

Friday, October 21st, 2016

வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட 543 மெல்ல கற்கும் மாணவர்களில் 255 மாணவர்கள் உடனடி மாற்றம் பெறக்கூடிய நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களின் கல்வியியல் மாற்றத்தை ஏற்படுத்தியது பெருவெற்றியாகும். இவ்வாறு வேள்ட்விசன் நிறுவன கல்வித்திட்ட இணைப்பாளர் எஸ்.வென்சஸ் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டுக்கான வேள்ட்விசன் நிறுவனத்தின் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான திட்டங்கள் தெரிவு தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

2016ஆம் ஆண்டில் சிறுவர்களின் கல்வி, போசாக்கு, ஆன்மீகம், சிறுவர் உரிமை ஆகிய துறைகளில் மாணவர்களை மையப்படுத்தியதாக பல்நோக்கு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் பாடசாலைகளில் மாணவர்களின் நிலைகளில் துரித முன்னேற்றம் இனம் காணப்பட்டது. இதற்கேற்ப 8 பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக நிகழ்ச்சிதிட்டமிடலில் 1036 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. 14 சிறுவர் கழகங்கள் உருவாக்கப்பட்டன. சிறுவர்களுக்கான வீட்டுத்தோட்டம், தலைமைத்துவம், சிறுவர் ஆன்மீகம் தொடர்பாகவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டது – என்றார்.

இந்தக் கூட்டத்தில் வலி.மேற்கு பிரதேச அபிவிருத்திக்கான 2017ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் எந்தத் திட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை முன்னிறுத்தியதுடன் சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், சமூகமட்டப் பிரதிநிதிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், உள்ளுராட்சி சபை அலுவலர்கள் ஊடாகவும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. மற்றும் வலி.மேற்கில் வேள்ட்விசன் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட துறைகளில் மக்கள் பயனடையக்கூடிய திட்டங்களும் முன்னிறுத்தப்பட்டது.

worldvision-703x422

Related posts: