சுகாதாரத்துக்கு ஒவ்வாத இறைச்சி விற்றவர்கள் மீது வழக்கு!
Friday, December 16th, 2016
சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியின்றி வெட்டப்பட்ட சுகாதாரத்திற்கு ஒவ்வாத மாட்டிறைச்சியை விற்பனை செய்த இருவரை தலா 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 25ஆம் திகதி ஒத்தி வைத்துள்ளார்.
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் நகர்ப் பகுதியிலுள்ள மாட்டிறைச்சிக் கடையொன்றில் சுகாதாரத்திற்கு கெடு விளைவிக்கும் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுகின்றது என்று கிடைத்த தகவலை அடுத்து பொதுச்சுகாதாரப் பரிசோதகர் அ.சஞ்ஜீவன் நேற்று முன்தினம் அங்கு சோதனை மேற்கொண்டார். கடையிலிருந்த 18கிலோ சுகாதாரத்திற்கு ஒவ்வாத இறைச்சியைக் கைப்பற்றி ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஒப்படைத்த சுகாதாரப் பரிசோதகர் கடை முதலாளிக்கும் விற்பனையாளருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
Related posts:
தொழில் அலுவலர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
வெளிநாடு செல்வதாயின் உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் - இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி!
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
|
|