விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
Monday, July 11th, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு சட்டத்திட்டங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வான் படையின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வான்படை அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மத்தியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மேலோங்கியுள்ளது. குறிப்பாக தீவிரவாதிகளின் தாக்குதல் அண்மையில் அதிகரித்துள்ளது.
அத்துடன், அண்மைய நாட்களில் தீவிரவாதிகள் ஆசிய நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டு வருக்கின்றனர்.எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தலை நீக்கிகொள்வதற்காக இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மேலும் 26 புனித தலங்கள் வர்த்தமானி மூலம் அறிவிப்பு!
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரசாங்க தகவ...
மன்னார் மாவட்டத்தின் பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து - தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மன்னார...
|
|
|


