சீனா, இந்தியா மற்றும் ஜப்பானிடமிருந்து நன்கொடை பெற இலங்கை திட்டம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, June 23rd, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வெளிநாட்டு உதவிகளை நாடியுள்ள நிலையில், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நன்கொடையாளர் மாநாட்டை நடத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

“வரலாற்று நட்பு நாடுகளாக இருந்த இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவின் ஆதரவு எங்களுக்கு தேவை,” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று இன்று இலங்கை வரும் என்று எதிர்பார்க்கப்படும் அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு சிறப்புக் குழு அடுத்த வாரம் விஜயம் செய்யும் என்று விக்கிரமசிங்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: