சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்முகராஜா காலமானார்!

Tuesday, March 2nd, 2021

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா (ஷண்) இன்று காலை காலமானார். 55 வருடகால ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான அன்னார் சிந்தாமணி, சூடாமணி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்தவராவார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை தனது 85 ஆவது வயதில் காலமானார்.

கலாபூஷணம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள அவர் கலை, இலக்கியம் மற்றும் சினிமா உட்பட பல்வேறு துறைகளிலும் தனது ஆற்றலை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்திருந்தார்.

அவரது மறைவுக்கு ஊடக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறுதிக்கிரியைகள் நாளையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: