ஞாயிரன்றே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித்தீர்மானம் – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Friday, April 30th, 2021

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களிடம் இருந்து இது தொடர்பான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிரதானமாக மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் கல்வியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள், முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் முதலானவற்றை இன்று 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இன்று (30) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: