சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கூட்டுறவு பணியாளர்களுக்கு விசேட சலுகை!

Tuesday, April 12th, 2016

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான விடுமுறை நாள் மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவை முன்கூட்டியே வழங்கப்பட்டு வருகின்றன.

அதனுடன் விட சங்கங்கள் மாதாந்தச் சம்பளக் கொடுப்பனவை முன்கூட்டியே வழங்கி வருகின்றன. அதனை விடச் சங்கங்கள் மாதாந்தச் சம்பளக் கொடுப்பனவையும் புத்தாண்டுக்கு முன்னர் வழங்குவதற்கு இயக்குநர் சபைக் கூட்டங்களில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கெனச் சங்கங்களின் இயக்குநர் சபைக் கூட்டங்கள் விசேடமாகக் கூட்டப்பட்டுப் பணியாளர்களுக்குக் கடந்த காலங்களில் வழங்க வேண்டிய கொடுப்பனவுகளைப் புத்தாண்டுக்கு முன்னர் வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளன.

அதனைவிடச் சில சங்கங்கள் சித்திரைப் புத்தாண்டு முற்பணமாகப் பத்தாயிரம் ரூபாவைப் பணியாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இக் கொடுப்பனவுடன் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளையும் சில சங்கங்கள் வழங்கியுள்ளன.

Related posts: