யாழ். பல்கலைக்கழகத்தில் 108 தேங்காய்கள் உடைத்து ஊழியர்கள் பிரார்த்தனை!

Friday, April 6th, 2018

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டம்  38 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் தாம் மேற்கொண்டு வரும் போராட்டம் வெற்றியடைய வேண்டி யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை(06) 108 தேங்காய்கள் உடைத்துப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

முற்பகல்-11 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில்  யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி. கலாராஜ் தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வில் ஊழியர்கள் ஒன்றிணைந்து ஆலய முன்றலில்  கற்பூரம் கொளுத்தி 108 தேங்காய்கள் உடைத்து  மனமுருகிப்  பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

குறித்த பிரார்த்தனை நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் உபதலைவர் சி.தங்கராஜா, இணைச் செயலாளர் த.சிவரூபன், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைப்புச் செயலாளர் பி.ரி.ஜே. யசோதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts:


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 23 பேரின் தண்டனையை தளர்த்த தீர்மானம்?
யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகயப்படுத்தும் யாசகா்கள் – நடவடிக்கை எடுக்குமாறு ...
தேவையான அரிசியை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு...