தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விடயங்களில் அரசு தலையிடாது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உறுதியளிப்பு!

Tuesday, December 20th, 2022

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமான அமைப்பாகும். தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரமும் அதற்கு உண்டு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆரம்ப கட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் செயல்பாட்டில் அரசாங்கம் தலையிடாது என்று உறுதியளித்தார்.

இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்றையதினம் (20) கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: