கோமாகமவில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலையில் சேர்க்குமாறு நீதிவான் உத்தரவு!

Sunday, October 16th, 2016

மிருசுவில் பகுதியில் உள்ள அலைபேசி விற்பனை நிலையத்தில் திருடிய குற்றச்சாட்டில், அச்சுவேலி சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனை கோமாகமவில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலையில் சேர்க்குமாறு யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு சாவகச்சேரி நீதவான் நேற்று (14) உத்தரவிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு முற்பகுதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் உள்ள கடையை உடைத்து அலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞனை கொடிகாமம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அவ்இளைஞன் அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்றுபெற்ற நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சான்று பெற்ற பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் குறித்த இளைஞன், சக மாணவர்களை அடித்து துன்புறுத்தியும், பாடசாலையின் நிர்வாகத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமையாத வகையில் நடந்து கொள்வதாக, சான்று பெற்ற பாடசாலையின் அதிபர், நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.

இளைஞனின் எதிர்காலம், மற்றும் அவரின் வயதினை கவனத்தில் கொண்ட நீதவான், கோமாகமவில் அமைந்து இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலையில் மூன்று வருடங்கள் தடுத்து வைக்க கட்டளையிட்டார்.

courts_2-900x450

Related posts: