கொரோனா சந்தேகம் தொடர்பில் இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020

கொரோனா சந்தேகம் தொடர்பில் இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனைகள் முடிக்கப்பட வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய, உரிய முறையில் குறீத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி மொத்தமாக 10 ஆயிரத்து 655 பிசிஆர் பரிசோதனைகள் நேற்றையதினம் மாத்திரம் இலங்கையில் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிப்புற்ற 5 இலட்சத்து 45 ஆயிரத்து 43 நபர்களுக்கு இதுவரை  பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: