கொடுப்பனவு வழங்கப்படாத பணியாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

Wednesday, August 17th, 2016

சவுதி அரேபியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் கொடுப்பனவு வழங்கப்படாமலிருக்கும் இலங்கைப் பணியாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவுதி அரேபிய அரசாங்கத்தின் தலையீட்டில், இலங்கைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படுவதாக சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அசீம் தாஸிம் தெரிவித்துள்ளார்.

தமது அலுவலகத்தின் ஒரு குழுவினர், இலங்கைப் பணியாளர்கள் தொடர்பில், அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சவுதி அரேபியாவில் நட்டமடைந்துள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: