குடாநாட்டில் விசேட பொலிஸ் ரோந்து !

Wednesday, April 27th, 2016
குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் குற்றங்களைத் தடுப்பதற்கு விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (26) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அரசாங்க அதிபர், யாழ். மாவட்டத்தில் கொக்குவில் பொற்பதி வீதி மற்றும் உரும்பிராய், சுன்னாகம் போன்ற பகுதிகளில் வாள்வெட்டு மற்றும் கொள்ளை போன்ற நடவடிக்கைகளில் அதிகளவு இளைஞர்கள் ஈடுபடுகின்றார்கள். அவற்றினைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
எனவே, அந்த குற்றச்செயல்களை கட்டுப்படுத்த உடனடியாக விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளை, யாழ். மாவட்டத்தில் காணப்படும் பொலிஸ் நிலைய பற்றாக்குறை மற்றும் மாடு, ஆடு போன்ற கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப் விற்கப்படுவதனையும், மணல் அகழ்வு உட்பட போதைப்பொருள்கள் விற்பனை, கசிப்பு விற்பனை ஆகியவற்றினை கட்டுப்படுத்துவதற்கு தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும், அந்த தகவலினை இரகசிய தகவலாக பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அரச அதிபர் மேலும் கூறினார்.

Related posts: