பொலிஸ் திணைக்கள கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
Saturday, January 21st, 2017
பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் பதவிகளிலுள்ள 84,000 உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பீ.எச்.மனதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது அவர்கள் பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்த நிலைமையானது பொலிஸ் உத்தியோகத்தர்கள் திறம்பட பணிபுரிவதற்கு இடையூறாக இருப்பதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
எனவே, இந்த உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதுடன், கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்ப ட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Related posts:
வைத்தியசாலைகளுக்கு 5 மில்லியனில் கண்காணிப்பு கமரா!
டெங்கு நோய்க்கான மருந்து வகைகளில் பற்றாக்குறை!
நாட்டை முழுமையாக முடக்ககாதுவிட்டால் பாரிய ஆபத்து - சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!
|
|
|


