காணி வழக்கை தீர்க்கக் கோரி குடும்பப் பெண் உண்ணாவிரதம்!
Thursday, December 15th, 2016
யாழ்.மாவட்ட நீதிமன்றில் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் காணி பிரச்சினை தொடர்பான வழக்கிற்கு விரைவில் தீர்வு வழங்கக் கோரி குடும்பப்பெண் ஒருவர் நேற்று யாழ்.பொது நூலகம் முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். யாழ்.பெரிய புலம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் அவரது கண் பார்வையற்ற தாயும் இவரது சிறு பிள்ளையும் ஈடுபட்டிருந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்:
எனது காணியானது நாச்சிமார் கோவிலடி பெரியபுலம் பாடசாலைக்கு அண்மையில் உள்ளது. நாம் அங்கு நீண்டகாலமாக அங்கு இருந்து வந்துள்ளோம். எமது காணி;க்கு பக்கத்திலுள்ள மற்றுமொரு பங்கு காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதால் அதனை பராமரிக்க வந்த நபர் அக் காணியை தனது பெயரில் பொய்யான உறுதியை தயாரித்துள்ளார்.
அத்துடன் தற்போது நாம் குடியிருக்கும் காணியையும் தனது காணி என கூறி பிரச்சினையில் ஈடுபட்டிருந்தார். இது தாடர்பாக யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 2001ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 16 வருடங்களாக நடந்து வருகினறது. ஒவ்வொரு முறையும் தவணைக்கான திகதி இடப்படுகின்றது. எனவே இவ் வழக்கிற்கு விரைவான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோhம். மேலும் குறித்த காணி என்னுடையதா இருக்கும்போதும் பொய்யான ஒர் வழக்கை தாக்கல் செய்து அதற்கு இதுவரை தீர்ப்பு வழங்கப்படாத வரையில் குறித்த வழக்கை யாழ்.மேல் நீதிமன்றம் எடுத்து அதனை முழுமையாக விசாரணை செய்து தீர்பளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தனர்.
Related posts:
|
|