டெங்கு பெருகும் சூழலை வைத்திருந்தால் சட்டம் கடுமையாக்கப்படும்!

Wednesday, May 11th, 2016

டெங்கு பெருகும் சூழலை வைத்திருப்போருக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களை தெளிவு படுத்துவதால் மாத்திரம் டெங்கு பெருகுவதை தடுக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே டெங்கு பெருகும் சூழலை வைத்திருப்போருக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தினால் மாத்திரமே இதனைத் தடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினை தொடர்ந்து கொழும்பில் டெங்கு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த நாட்களில் புகை விசுறும் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: