கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய தாயார் – சீனா அறிவிப்பு!

Wednesday, April 13th, 2022

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவுவதற்கு தம்மால்; முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க பண உதவி கோரி இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டபோபோதே சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நேற்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சீனா இலங்கைக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், அதை தொடர்ந்து செய்யும் என்றும் தனது அமைச்சகத்தின் முன்னைய கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவையும் புரிந்துணர்வையும் வழங்கியுள்ளன என்று அவர் பீய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

ஏற்கனவே சீனா, இலங்கைக்கு 2.5 பில்லியன் டொலர்கள் வழங்கும் என்று நம்பிக்கை தமக்கிருப்பதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்த்தக்கது.

Related posts: