காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

Thursday, October 13th, 2016

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேசத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றபோது காணாமல் போயிருந்த நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சங்கானை ஓடக்கரை வீதியைச் சேர்ந்த சிவநாதன் செல்வரத்தினம் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த நபர் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை மீன் பிடித்து வருவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றிருந்தார். எனினும் மாலையாகியும் வீடு திரும்பாததால் வீட்டார் இவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்ததுடன் ஊடகங்களிளும் விளம்பரம் செய்திருந்தனர்

இந் நிலையில் நேற்றைய தினம் இவரது துவிச்சக்கர வண்டியானது மண்டைதீவு கடற்கரைக்கு அண்மையில் இருந்துள்ளது. இதனையடுத்து கடலில் ஏதாவது காரணத்தால் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கடலில் தாவரங்கள் சூழ்ந்த நிலப்பகுதியில் சடலமாக அவர் மீட்கப்பட்டிருந்தார். இந் நிலையில் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த நபர் சதுப்பு நிலத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்திருந்தனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

death 545dde

Related posts: