கிரிக்கெட் போட்டியினை தடை செய்ய ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை!

Tuesday, February 21st, 2017

போதைப் பொருள் பாவனை மற்றும் மோதல் ஆகியவற்றின் தாக்கங்களில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்ற பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்படும் பிக் மெச் கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டம் சம்பந்தமாக அரச தகவல் திணைக்களத்தில் இன்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பாடசாலைகள் இடையில் நடத்தப்படும் பிக் மெச் கிரிக்கெட் போட்டிகள் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதற்கு கடந்த காலங்களும் உதாரணங்களை தந்துள்ளன எனவும் சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் பிக் மெச் கிரிக்கெட் போட்டிகள் காரணமாக மாணவர்களுக்கு இடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2222-23

Related posts: