கல்லுண்டாய் வெளியில் 50 பேருக்கு வீடுகள்!

அரச காணிகளில் தங்கியிருந்த நீதிமன்ற உத்தரவின் கீழ் வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப்பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது –
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அரச காணிகளில் தங்கியிருந்த, நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியேற்றப்பட்டு வீடுகள் இல்லாத மக்களுக்கு முதல் கட்டமாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீள் குடியேற்ற அமைச்சின் நிதியில் 50 பேருக்கான வீடுகள் மாவட்டச்செயலகத்தின் ஊடாக அமைக்கப்படவுள்ளன. தலா ஒருவருக்கு 2 பரப்பு அரச காணி கல்லுண்டாய் பகுதியில் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகள் மூலம் ஏனையவர்களுக்கான வீடுகள் அரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|