கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை!

யாழ்.நகரில் கட்டாக்காலியாக கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சி மன்றம் இறுக்கமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கால்நடைகளால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதோடு போக்குவரத்திற்கும் இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் யாழ்.மாநகர அபிவிருத்தி திட்டத்திற்கு முன்பாக இக் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த விசேட திட்டமொன்றை மாநகராட்சி மேற்கொள்ளும் என்று மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
கால்நடைகளை மக்கள் கட்டி வளர்க்க வேண்டும். கட்டாக்காலியாக நடமாடும் இக் கால்நடைகளால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நகர அபிவிருத்தித் திட்ட நிர்மாணப் பணிகளுக்கு முன்பாக இக் கால்நடைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். யாழ் – முற்றவெளி சுப்பிரமணியம் பூங்கா மற்றும் பண்ணை கடற்கரை பூங்கா என்பன மக்களை கவரும் வகையில் திறந்த வெளி பூங்காவாக அழகுபடுத்தப்படும். சுப்பிரமணியம் பூங்காவை சுற்றிய பாதுகாப்பு மதில்கள் அகற்றப்பட்டு அந்த பூங்கா திறந்த பூங்காவாக அழகுபடுத்தப்படும். முற்றவெளி பிரதேசமும் மக்களை கவரும் வகையில் திறந்த பூங்காவாக இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்படும். இந்த நகர அபிவிருத்தி திட்டத்திற்கு முன்பாக கால்நடைகளின் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்றும் ஆணையாளர் மேலும் கூறினார்.
Related posts:
|
|