வளிமண்டல குழப்ப நிலை உருவாகும் சாத்தியம் – நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, January 9th, 2022

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பாகங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில பாகங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இரத்தினபுரி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வரும் சில நாட்களுக்கு குறைந்த வளிமண்டல குழப்ப நிலை உருவாகும் சாத்தியம் காணப்படுவதால், கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறையின் சில பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: