யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் 260 காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் – பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா!

Sunday, September 13th, 2020

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வருடம் 260 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் காசநோய் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மட்டும் 160 காச நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில் இனங்காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக இந்த வருடம் 260 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொரோனாவிற்கு பின்னர் இருமல் அறிகுறியுடையவர்கள் வைத்தியசாலைக்கு வருவது குறைவடைந்துள்ளது. மேலும் 50 பேருக்கு மேல் காச நோய் இனங் காணப்படாமல் உள்ளார்கள்.

இவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த பிரதிப்பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிலும் காச நோய்க்குரிய சிகிச்சைகள் சளிப்பரிசோதனை செய்யக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: