கடமைக்கு திரும்பாதுள்ள படை யைவிட்டு விலகிய 42,000 பேரையும் உடன் கைது செய்ய நடவடிக்கை!

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், பொது மன்னிப்புக் காலத்தில் சாரணடையாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொஷான் செனவிரட்ண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த இராணுவ வீரர்களை கைது செய்வதற்கான அதிகாரம், காவல்துறையிடமும், குடிவரவு குடியகல்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 42,500 இராணுவ வீரர்கள் பொது மன்னிப்புக் காலத்தில் இராணுவத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் சரணையடையாது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
Related posts:
தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்களுக்கு கௌரவிப்பு!
மயங்கி விழுந்தவர் சாவு – சாவகச்சேரியில் பரிதாபம்!
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை - உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர...
|
|