கஞ்சா கடத்திய இருவருக்கு 17ஆயிரத்து 500 ரூபா தண்டம்!

Friday, December 16th, 2016

கிளிநொச்சிப் பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு 17ஆயிரத்து 500ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 20நாட்கள் கட்டாய சமூக சேவையில் ஈடுபடுமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் கடந்த 9ஆம் திகதி 2ஆயிரத்து 50மில்லிக்கிராம் கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த ஒருவரை கைது செய்த கிளிநாச்சி பொலிஸார் குறித்த நபரை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து 10ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 20 நாட்கள் கட்டாய சமூக சேவையில் ஈடுபடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court-_81

Related posts: