ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் டுபாய் பயணம்!

Sunday, November 26th, 2023

ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் 80 உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அலி சப்ரி, கஞ்சன விஜயசேகர, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்கள் அடங்கிய சுமார் 80 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் அடுத்தவாரம் இலங்கை முன்னின்று நடத்துகின்ற சூழல் பாதுகாப்பு மாநாட்டிற்காகவே இந்த குழு அங்கு செல்கிறது.

அத்துடன், 20 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்றும், 15 தொழில்நுட்ப ஆலோசகர்களும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில், பிரபல ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,

இந்த குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் டுபாய் பயணத்துக்கான கட்டணங்கள் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது பிற நிறுவனங்கள் அனுசரணை வழங்கி இருக்கலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: