ஊடகவியலாளர்கள் தொடர்பில் 9 ஆம் திகதி சபையில் விவாதம்!

Tuesday, August 7th, 2018

ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதி விவாதமொன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த விவாதத்துக்கான பிரேரணையை கூட்டு எதிரணி முன்வைத்துள்ளதாக அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ரஞ்சித் சொய்ஷா எம்.பி குறிப்பிட்டார். சுபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக இது எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை விவாதம் நடைபெறவுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ச்சியாகப் பதிவாகி வருகின்றன என்றும் இந்த வகையில் சுமார் 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் கூட்டு எதிரணி முன்வைத்துள்ள பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: