மீண்டும் வருகின்றது மூலதன வரி !

Thursday, June 16th, 2016

கைவிடப்பட்டிருந்த மூலதன வரியை மீண்டும் அறிமுகப்படுத்த நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு முன்வைத்திருந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக தனியார் துறையின் மூலதனம் பன்மடங்காக அதிகரித்திருப்பதன் காரணமாக வருமானப் பங்கீடு முறையாக நடைபெறுவதில்லை. இதனைக் கருத்திற் கொண்டே மூலதன வரியை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், பொருளாதார முகாமைத்துவ உபகுழுவும் அதனை அங்கீகரித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வரி பெரும் செல்வந்தர்களிடமிருந்து மட்டுமே அறவிடப்படவுள்ளதுடன், வரியின் வீதம் மற்றும் ஏனைய விபரங்களை விரைவில் நிதியமைச்சு வெளியிடும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Related posts: