இளவாலையில் உருக்குலைந்த ஆணின் சடலம் மீட்பு!

Monday, December 19th, 2016

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதி  பற்றைகாட்டுப்பகுதியிலிருந்து முகம் சிதைந்த ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (19) இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அவதானித்த பொதுமக்கள் சிலர் அங்கு சென்று பார்த்த நிலையில் குறித்த சடலம் இருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர்.

அத்துடன் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளதுடன் அருகில் கை ஊன்று தடி மற்றும் பை ஒன்றும் காணப்படுகின்றது.

குறித்த சடலம், 40 – 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது எனவும், கால் ஒன்று நடக்க முடியாதவாறு உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Body-Found-at-Jaffna-Ilavalai-1

Related posts: