ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை!  

Sunday, July 30th, 2017

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லையென பெர்பெச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்தின் சார்பான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஆணைக்குழு விசாரணைகளின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி முதல் ஜூலை 25ஆம் திகதி வரை ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பெறப்பட்ட வாக்குமூலங்கள் சட்டவிரோதமானது எனவும் பெர்பெச்சுவல்ட் ரெசரிஸ் நிறுவனத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கூறியுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி வர்த்தமானியின் மூலம் அனுமதியை பெற்றுக்கொடுத்திருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பிணைமுறி விசாரணை அறிக்கையை தயாரிப்பதற்காக காலத்தை நீடிக்கலாமே தவிர சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக ஆணைக்குழுவின் காலத்தை நீடிப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் இல்லை என்றும் பெர்பெச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


கொரோனாவால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு பல ஆபத்தான நோய்களாலும் பதிக்கப்பட்டிருந்தனர் – தொற்று நோயி...
கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு செக் குடியரசு பங்களிப்பு செய்யும் – இலங்கைக்கான தூதுவர் உறுதி...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை சார்பான மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிக்கும் காலத்தில் மாற்றம் - பரீட்சைக...