ஆசிரியர் வெற்றிடங்களுக்காக தனியார் பல்கலைக்கழகங்களில் இருந்தும் இணைத்துக் கொள்ளப்படும்!

Saturday, August 20th, 2016

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்களை இணைத்துக் கொள்ளும் போது அரச பல்கலைக்கழகங்களில் இருந்து மாத்திரமல்லாது தனியார் பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் கல்வித் துறையை கட்டியெழுப்புவதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கல்வியமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts: