அல்லைப்பிட்டியில் வீடு புகுந்து கொள்ளை!

Thursday, December 21st, 2017

அல்லைப்பிட்டியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் தனித்திருந்தவரை கட்டிவைத்துவிட்டு 20 பவுண் நகை மற்றும் 2 இலட்சம் ரூபா காசு என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

அல்லைப்பிட்டியிலிருந்த குறித்த வீட்டிலிருந்த மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர் வீடு ஒன்றிற்குச் சென்ற சமயம் கணவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந் நிலையில் நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் 6 பேர் கொண்ட கொள்ளைக் குழுவினர் குறித்த வீட்டு வளவிற்குள் நுழைந்துள்ளனர்.

வீட்டில் இருந்த குடும்பத்தாரை கட்டி வைத்த பின்னர் 20 பவுண் நகை மற்றும் பணம் 2 இலட்சம் ரூபா என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: