சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்டம்!

Tuesday, December 24th, 2019


யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் இன்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறுகின்றது.

இற்று காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்’தில் ஆரம்பமான குறித்த ஆராய்வு கூட்டத்தில் யாழ் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பிரதேசங்களின் பொலிஸ் அதிகாரிகள் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டுள்ள இந்த கூட்டத்தில் யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள சட்டவிரோத மண்ணகழ்வு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, வாள்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.

Related posts: