எமது வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் – நம்பிக்கையான வாழ்க்கையை வென்றெடுத்து காட்டுவேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, September 27th, 2019

நம்பிக்கையுடன் நான் கூறும் வழிமுறையை நோக்கி அணிதிரண்டு வாருங்கள். தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவித்துவரும் பிரச்சினைகளுக்கு அடுத்துவரும் ஆட்சிமாற்றத்துடன் நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தந்து நிம்மதியான ஒரு வாழ்வியல் சூழ்நிலையை உருவாக்கி காட்டுவேன் என் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வெற்றிலைக்கேணி கட்டைக்காடு முள்ளியான் பிரதேச பொது மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இப்பகுதி மக்கள் யுத்தத்தால் மட்டுமல்லது இயற்கையின் சீற்றத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் நாம் இப்பகுதி மக்களுக்கு பலவகையான தேவைப்பாடுகளை நிறைவு செய்து கொடுத்துக்கின்றோம். ஆனாலும் அது இன்னமும் முழுமையாக நிவர்த்திசெய்து கொள்ளப்படாத நிலையே தொடர்கின்றது. இதற்கு காரணம் தமிழ் மக்களின் வாக்குகளை சூரையாடியவர்கள் மக்களையும் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் மறந்து தத்தமது சுயநலம் சார்ந்து செயற்படுவதே காரணமாகும்.

எமது மக்கள் தொடர்ந்தும் வறுமை நிறைந்தவர்களாக இருப்பதற்கு நாம் முற்றுப்புள்ளி இடவேண்டும். அவர்களும் எமது மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து அந்தந்த நாடுகளில் எவ்வாறு சிறப்பாக தமது வாழ்க்கை முறையை வாழ்கிறார்களோ அதுபோன்றதொரு சிறப்பான வாழ்க்கை முறையை இங்குள்ள எமது மக்களும் வாழ வழிவகை செய்யவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.

அதை நாம் முன்னெடுக்க எமக்கு இதுவரை எமது மக்கள் அதிகளவான அரசியல் பலத்தை தராமையால் அது நிறைவு செய்துமுடியாது போனது. இருந்தும் எமது மக்களுக்கு தற்போது சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை எமது மக்கள் இம்முறை சரியாக பயன்படுத்தி நாம் கூறும் வழிமுறைக்கு வலுச்சேர்ப்பார்களானால் நிச்சயம் அவர்களது எதிர்பார்ப்புக்களை எம்மால் வென்றெடுத்து தர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியர்தர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts:


தெற்கில் தொழில்துறை போராட்டம் வடக்கில் வாழ்வுக்கான போராட்டம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.
காங்கேசன்துறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் த...
விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ...