ஆண்டு மலர்வில் மீண்டு எழுவோம் – புத்தாண்டுச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

தலைநிமிர்வை தரும் உரிமை வாழ்விற்கான கனவுகளை வெல்ல தமிழ் தேசிய இனம் ஆண்டு மலர்வில் மீண்டு எழ வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வாழ்த்து செய்தியில்,.. வீழ்வோம் ஆயினும் மறுபடி எழுந்து உரிமையுடன் வாழ்வோம் என்பதே தமிழ் தேசிய இனத்தின் உறுதி மொழி!…
இந்த உறுதி மொழியை ஏற்று தமிழ் தேசிய இனத்தின் நெடுங்கனவை வென்றிட பிறக்கின்ற புத்தாண்டிலும் நாம் உழைப்போம் என உறுதி கொள்கிறோம்.
எமது மக்களின் நெடுங்கனவை நோக்கிய பயணத்தை வெல்ல முடியாதபடி ஏமாற்று வித்தை காட்டி எமது மக்களை ஆழ்ந்த மயக்கத்தில் வைத்திருந்த இருண்ட காலம் இன்று ஒழிந்து போனது. அரசியலுரிமை,. அபிவிருத்தி,. அன்றாட அவலங்களுக்கான
தீர்வு நோக்கிய எமது இலட்சியப்பணிகளுக்கு குறுக்கே வீழ்ந்து கிடந்த தடைக்கற்கள் இன்று அகன்று போயின. தமிழ் தேசிய இனத்தின் உரிமை நோக்கிய கனவை ஒரு தோளிலும்
அரசுடனான தேசிய நல்லிணக்க உறவுகளை மறு தோளிலும்சுமந்து நடக்கும் எம்மை நோக்கி இன்னமும் பலமாக மக்கள் இன்று அணி திரண்டு வருவதையிட்டு நான் அகமகிழ்ந்து வரவேற்கிறேன்..
தவறான பாதைகளை தெரிவு செய்து, மாய மான்களை பின் தொடர்ந்து ஓடியதால்,..கடந்து போன ஒவ்வொரு புத்தாண்டுகளும் தமக்கு புது மகிழ்வை தருவதற்கு மாறாக,..
தொடர்ந்தும் துயர் சூழ்ந்த வாழ்வையே தந்திருப்பதாக எமது மக்கள் தம் தவறை எண்ணி இன்று வருந்துகின்றனர்.
பிறந்திருக்கும் புத்தாண்டு எமது மக்களுக்கு புது நிமிர்வைதர வேண்டும். சூழ்ந்திருக்கும் துயர்கள் யாவும் தூர விலக வேண்டும்.
மக்களின் மகிழ்ச்சியும் மாற்றங்களும் ஒரு போதும் தாமாக நிகழ்வதில்லை.எமது மக்கள் சரியான திசைவழி நோக்கி விழித்தெழுதல் ஒன்று மட்டுமே மாற்றங்களுக்கு வழி சமைக்கும்.
ஆற்றலும்,.ஆளுமையும், மாற்றத்தை நோக்கிய விருப்பமும் மிக்க எமது வலிய கரங்களை பலப்படுத்துவதே
பிறந்திருக்கும் புத்தாண்டை மகிழ்ச்சி தரும் ஆண்டாக மாற்றும்.இலட்சிய தேரின் வடம் பிடித்து சேர்ந்திருப்போம் வாருங்கள்! சகலருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!..
Related posts:
|
|