வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலைய மேம்பாடு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!

Saturday, September 17th, 2016

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் வேலணை மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் (16) இச்சந்திப்பு இடம்பெற்றது.

முன்பதாக வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர்.

DSCF1209

இதேபோன்று 6ஆம் வட்டாரம் வேலணை மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையப் பிரதிநிதிகள் தமது நிலையத்தின் தேவைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தனர்.

இந்த சனசமூக நிலையத்தை மேலும் நல்ல முறையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதிநிதிகள் இதனூடாக சமூகத்தில் மாற்றத்தையும் மேம்பாட்டையும் ஏற்படுத்த முடியும் என்றும் இதற்கு தாங்கள் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதனடிப்படையில் அதற்கான திட்டத்தை தமக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவற்றை முன்னெடுப்பதற்கான முயற்சிகளைத் தாம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

DSCF1226

Related posts: