வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட விளையாட்டுகளுக்கு தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் வல்லமை இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, October 31st, 2023

இனம், மதம், மொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட விளையாட்டுகளிற்கு தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் வல்லமை இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா, தேசிய மட்டத்திலான போட்டிகளை வடக்கு கிழக்கு பகுதியில் முன்னெடுப்பது ஆரோக்கியமான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உள்ளக அரங்கில் இன்றையதினம் தேசிய ரீதியிலான பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பூப்பந்தாட்ட விளையாட்டை வடக்கு கிழக்கு பிரேதேசத்தில் முன்னேற்றுவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவும் தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்துள்துள்ளார்.

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று  ஆரம்பமான  தேசிய பூப்பந்தாட்ட போட்டிகள் இன்றுமுதல் 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்தவகையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள உள்ளக அரங்கில் ஆரம்பமான குறித்த ஆரம்ப நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்து சிறப்பித்திருந்தார்.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அதிகாரிகளும், விளையாட்டு வீரர்களும் வரவேற்றனர்.  அதனைத்தொடர்ந்து அமைச்சர் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்

இந்நிகழ்வில் கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்கள் எனப்  பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது வருகைதந்த அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கடற்றொழில் அமைச்சின் செயற்திட்டங்கள் மக்களை நோக்கியதாக முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – நாட...
மக்களின் வாழ்க்கை முறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் நன்மை தரக் கூடிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி – ...
பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணி நிலங்களும் அடுத்த சில மாதங்களுக்குள் விடுவிக்க...